என்.எல்.சி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் நிதியுதவி!

நெய்வேலி என்.எல்.சி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு, தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் உள்ள பாய்லரில், புதன் கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 16 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும், படுகாயம் அடைந்தோருக்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ருபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் எனவும் என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version