தமிழக அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளின் மாணவர்கள் தயாரித்த 30 கிராம் எடை கொண்ட சிறிய வகை செயற்கைக்கோளை, சிறுசேரி பகுதியில், உள்ள ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா வளாகத்தில், இருந்து ராட்சத பலூன் முலம் விண்ணில் செலுத்தபட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரியில் விண்வெளி துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில், விக்ரம் சாராபாய் விண்வெளி சவால் என்ற போட்டியை ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு அறிவித்து இருந்தது. இந்த போட்டியில் 32 பள்ளிகள் கலந்து கொண்டதில், 12 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை தேர்ந்தேடுத்து, அந்த மாணவர்கள் தயாரித்த 30 கிராம் எடையை கொண்ட சிறிய செயற்கைக்கோள் சிறுசேரி பகுதியில் இருந்து ராட்சத பலூன் மூலம் விண்ணில் அனுப்பப்பட்டது.