அணைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 30 அணைகளை சீரமைக்க திட்டமிடப்பட்டு உலக வங்கிக்கு அறிக்கை அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் 107 அணைகளை புரனமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 60 அணைகளின் கரைகளை பலப்படுத்துவது, மதகுகளை சீர் செய்வது உள்ளிட்ட புனரமைப்பு பணி முடிக்கப்பட்டுள்ளன. 9 அணைகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் புனரமைப்பு பணிகளை 2020-ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என உலக வங்கிக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் எழுதியது. அதன் பேரில் இப்பணிகளை முடிக்க காலக்கெடுவை நீட்டித்து உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் அணைகள் புனரமைப்பு பணிக்கு 745 கோடிக்கு பதில் 803 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் நடந்து வரும் அணைகள் புனரமைப்புகளின் நிலை என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையில் அடுத்தக்கட்டமாக 30 அணைகளின் புனரமைப்பு பணிக்கான திட்ட அறிக்கை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அந்த அறிக்கை உலக வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.