மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 30.62 சதவீத வாக்குகள் பதிவானதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாஹு, தமிழகத்தில் அதிகபட்சமாக, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 36.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். குறைந்தபட்சமாக, மத்திய சென்னையில் 22.89 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் அவர் கூறினார். இடைத்தேர்தலிலும், 28 முதல் 30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் சத்யபிரதா சாஹு தெரிவித்தார். மேலும், காலையில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவின் போது, சரியாக வேலை செய்யாத 305 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 525 விவிபேட் இயந்திரங்களும் மாற்றப்பட்டதாகவும், தற்போது வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.