3ஆண்டுகளாக டயருக்குள் சிக்கித் தவிக்கும் முதலை!

ஒரு முதலை கழுத்தில் மூன்று ஆண்டுகளாக இரு சக்கர வாகனத்தின் டயர் மாட்டி கொண்டு சாப்பிடாமல் தத்தளித்து வருகிறது.

இந்தோனேசியாவில் உள்ள மத்திய சுலவேசியின் தலைநகரான பாலுவில் அருகில் உள்ள ஓடும் ஆற்றில் ஒரு முதலை மூன்று ஆண்டுகளாக ஒரு இரு சக்கர வாகனத்தின் டயரை அதன் கழுத்தில் சுமந்து கொண்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் யாரோ ஒருவர் ஓடும் ஆற்றில் இருசக்கர வாகனத்தின் டயரை வீசியுள்ளனர். அது 13 அடி நீளம் கொண்ட சியாமி என்ற முதலையின் கழுத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.

இதனால் முதலை உணவை வேட்டையாடி சாப்பிட்டாலும் அதன் தொண்டைப் பகுதியில் உள்ள டயர் இறுக்கமாக இருப்பதால் சியாமி முதலையால் சரியாக உணவை சாப்பிட முடியாமல் பட்டினியால் வாடி கொண்டு வருகிறது.

முதலையின் தொண்டை பகுதியில் உள்ள டயரை நீக்க வனத்துறை அதிகாரிகள் பல முயற்சிகள் செய்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. விரைவில் டயரை முதலையின் கழுத்தில் இருந்து அகற்றப்படாவிட்டால் டயர் முதலை கழுத்தை நெரிக்கும் என பாதுகாவலர்கள் கவலை கொண்டுள்ளனர். முதலையின் தொண்டை பகுதியில் இருந்து டயரை நீக்க அதிகாரிகள் தொடந்து முயற்சிகள் செய்து வருகின்றனர்.

Exit mobile version