தேனி மாவட்டம் போடி அருகே திமுக பிரமுகருக்கு சொந்தமான கல்குவாரியில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தப்பட்ட சம்பவத்தில் 3 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
போடி அடுத்துள்ள பூதிபுரத்தில் திமுக பிரமுகருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மண், மணல், ஜல்லி போன்ற கனிமங்கள் அனுமதியின்றி கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து இங்கிருந்து கேரளாவிற்கு மணல் கடத்திய திமுக பிரமுகருக்கு சொந்தமான 3 டிப்பர் லாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பறிமுதல் செய்தார். வாகன சோதனையின்போது போடி மெட்டு வாகன சோதனை சாவடியில் இந்த லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த மணல் கடத்தல் குறித்து போடி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.