கடந்த ஒரு வாரத்தில், குடிசைவாழ் பகுதி மக்களுக்கு, ஒன்றரை கோடி விலையில்லா உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் கனமழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு, மூன்று வேளையும் விலையில்லாத தரமான உணவு வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
இதன் மூலம், கடந்த ஒரு வாரத்தில், 26 லட்சம் குடிசைவாழ் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இவர்களுக்கு, மூன்று வேளை என, மொத்தம் ஒன்றரை கோடி உணவுப் பொட்டலங்கள், தொகுப்புகள் வழங்கி, சென்னை மாநகராட்சி சாதனை படைத்துள்ளது. இன்றுடன் நிறைவுபெறும் இத்திட்டத்தின் மூலம், மேலும் பல லட்சம் குடிசைவாழ் மக்கள் பயனடைய உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் இந்நடவடிக்கையால் பயனடைந்த குடிசைவாழ் மக்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.