இளம் வழக்கறிஞர்களுக்கு மாதந்தோறும் 3ஆயிரம் உதவித்தொகை – முதல்வர் பழனிசாமி உத்தரவு!

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வழக்கறிஞர்களின் நலன் கருதி, அதிமுக அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். 1987 ஆம் ஆண்டு இறந்த வழக்கறிஞர்களின் வாரிசுகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்வர் எம்ஜிஆர் துவங்கி வைத்ததை சுட்டிக் காட்டியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை 2 லட்சத்திலிருந்து 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயர்த்தியதையும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் இந்த நிதியுதவித் தொகை 7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு, 2 வருடங்களுக்கு மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் பயிற்சியில் உள்ள இளம் வழக்கறிஞர்கள், சிக்கலின்றி தங்கள் தொழிலை தொடர முடியும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version