வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர 3 கப்பல்கள் புறப்பட்டன!!!

பல்வேறு வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் பணியை, மத்திய அரசு துவங்கியுள்ளது, முதற்கட்டமாக மாலத்தீவு, ஐக்கிய அரபு நாடுகளுக்கு 3 கப்பல்கள் புறப்பட்டுள்ளன. கொரோனா தாக்கத்தால் சர்வதேச விமானங்கள் இயங்காத நிலையில், வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதன்படி, இந்தியர்களை அழைத்துவர, மும்பையில் உள்ள கடற்கரையில் இருந்து 3 கப்பல்கள் இன்று அதிகாலை புறப்பட்டன. 2 கப்பல்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், 1 கப்பல் மாலத்தீவுக்கும் புறப்பட்டது. மேலும், வரும் 7-ம் தேதி, இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் கேரளாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படுகின்றன. விமானத்தில் பயணிக்கும் பயணிகள் தங்கள் பயணத்திற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும், நாடு திரும்பியவுடன் நடக்கவிருக்கும் மருத்துவப் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கு அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மே 7-ம் தேதி முதல் 14-ம் தேதிவரை, 12 நாடுகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம், 15ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் தூதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிவின் படி, முதற்கட்டமாக வேலை இழந்தவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் இந்தியா அனுப்பப்படுவார்கள் என தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version