வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்டோரிடம், கோடி கணக்கில் மோசடி செய்த மூன்று பேரை, காவல் துறையினர் கைது செய்தனர். பெங்களூருவைச் சேரந்த வானதி, ராஜீவ், தங்கராஜ் ஆகியோர் இணைந்து, கோவை வடவள்ளி பகுதியில், தி எண்டர்பிரைசஸ் என்னும் பேரில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்த மூவரும் இணைந்து, நூற்றுக்கும் மேற்பட்டோரிடம், வேலை வாங்கி தருவதாக வாட்ஸ் ஆப் மூலம் குறுந்தகவல் அனுப்பி, நபருக்கு 2 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராததால், பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர், கோவை மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த வானதி, ராஜீவ் மற்றும் தங்கராஜ் ஆகியோரை கைது செய்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.