அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்போது 9 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 3 சதவீத அகவலைப்படி உயர்வு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது ஜனவரி 1ம் தேதியில் இருந்து, முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.