கொரோனா வைரசுக்கான அறிகுறி பட்டியலில் மேலும் மூன்று புதிய அறிகுறிகளை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் இணைத்துள்ளது.
கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவத் தொடங்கிய போது காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மட்டுமே பொதுவான அறிகுறிகளாக கண்டறியப்பட்டன. பிறகு நோய் குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் கூடுதல் அறிகுறிகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான புதிய அறிகுறிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, வாந்தி ஏற்படும் உணர்வு மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவை புதியஅறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மனிதனின் உடல் நிலைக்கு ஏற்றவாறு அறிகுறிகளும், நோயின் தாக்கமும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட 2 முதல் 14 நாட்களில் அறிகுறிகள் தென்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.