கர்நாடகத்தில் இருந்து காவிரியில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்து வருவதால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியுள்ளன. இதையடுத்துக் கபினி அணையில் இருந்து நொடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நொடிக்கு ஒன்றரை லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே நேற்று இரண்டரை லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 3 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. மிக அதிக அளவு தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரையுள்ள காவிரிக் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.