பிகிலுக்கு முன்னாடியே வெளியாகிறது 3 மாஸ் ஹீரோக்களின் படங்கள்..

பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னரே அசுரன், சங்கத்தமிழன், 100%காதல் ஆகிய திரைப்படங்கள் அக்டோபர் 4 ம் தேதி வெளியாகவுள்ளது.

ஒவ்வொரு தீபாவளிக்கும் மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும்.இந்த ஆண்டு தீபாவளிக்கு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் திரைப்படமும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் கைதி திரைப்படமும் வெளியாகவுள்ளது.தளபதியின் அடுத்த படமான தளபதி 64 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார்.

இந்நிலையில் பிகிலுக்கு முன்னரே அக்டோபர் 4ம் தேதி 3 மாஸ் ஹீரோக்களின் படம் வெளியாகவுள்ளது.தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணியில் அசுரன் திரைப்படமும், விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படமும் வெளியாகிறது. மேலும் தெலுங்கில் நாக சைதன்யா-தமன்னா நடிப்பில் வெளிவந்த 100 % லவ் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ஜி.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே நடிப்பில் ’100% காதல்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது.இந்த மூன்று படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில், யார் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடம் பிடிப்பார் என்பது ரசிகர்கள் மத்தியில் போட்டியாகவே உள்ளது.

Exit mobile version