குடியாத்தம் அருகே வாகன தணிக்கையின் போது, ஆந்திரா நோக்கி சென்ற காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற 3 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 50 ஆயிரம் ரூபாயிக்கு மேல் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்றால், பணம் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திரா நோக்கி சென்ற காரை சோதனை செய்ததில், உரிய ஆவணம் இல்லாமல் எடுத்த செல்லப்பட்ட 3 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.