வேலூரில் நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது கணக்கில் வராத மூன்று லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பறக்கும் படை குழுவினர் 24 மணி நேரமும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் ஆற்காடு செல்லும் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தனி தாசில்தார் திருமதி ரூபி பாய் தலைமையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர் .
அப்போது, 4 கார்களில் உரிய ஆவணங்கள் இல்லாத 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் பாதுகாப்பாக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை அளித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.