பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகுறிப்பில், கோவை மாவட்டம் பன்னிமடை கிராமத்தில் 7வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரமடைந்ததாக தெரிவித்துள்ளார்

இந்த கொடூரச் செயலுக்கு காரணமான குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுதர நடவடிக்கை எடுக்க காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதலமைச்சர், சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version