3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்துள்ளது!

சீனாவில் இருந்து 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில், நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கங்கா கேட்கர், தற்போது வரை, 2 லட்சத்து 90 ஆயிரத்து 401 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என கூறினார். சீனாவில் இருந்து 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளோடு மொத்தம் 5 லட்சம் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்துள்ளதாக தெரிவித்த அவர், நோய் தொற்றை கண்காணிக்கவே ரேபிட் டெஸ்ட் கருவிகள் பயன்படும் எனவும் தெரிவித்தார். அப்போது பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என கூறினார்.

Exit mobile version