சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட 1 கோடி மதிப்புடைய தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை மற்றும் மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் 3 பெண்கள் உட்பட 9 பேர் சுமார் 1 கோடி மதிப்புடைய 3 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், 9 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், சென்னையில் இருந்து மஸ்கட் வழியாக துபாயிக்கு கடத்த முயன்ற 37 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Exit mobile version