3கிலோ வெள்ளி மற்றும் 1,52,500 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்

நாமக்கல் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 3 கிலோ வெள்ளி மற்றும் 1 லட்சத்து 52 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படைஅதிகாரி செங்கோட்டுவேல் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த காரை சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 3 கிலோ வெள்ளி மற்றும் 5 கிராம் தங்கம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் வாகனத்தில் வந்த பூபதிராஜாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் அவ்வழியாக வந்த மினி லாரியை அதிகாரிகள் சோதனை செய்த போது உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 1 இலட்சத்து 52 ஆயிரத்து 500 பணம் இருந்தது தெரிய வந்தது. இதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

Exit mobile version