பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் அமைச்சர்களாகியுள்ளனர். அந்நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்ற உடன், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் வேகம் காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக ப்ரீதி பாட்டில் என்ற இந்திய வம்சாவளிப் பெண்ணை உள்துறை அமைச்சராக ஆக்கியுள்ளார். அது மட்டுமல்ல, சர்வதேச மேம்பாட்டுத்துறை அமைச்சராக அலோக் சர்மா என்பவரையும், நிதித்துறை தலைமை அமைச்சராக ரிஷி சுனக் என்பவரையும் நியமித்துள்ளார். ஏற்கனவே சர்வதேச மேம்பாட்டு அமைச்சர் பதவியில் இருந்த ப்ரீதி பாட்டில் , இஸ்ரேல் பிரதமருடன் ரகசிய சந்திப்பில் ஈடுபட்டார் என்ற புகாரில் சிக்கி, 2017 ல் பதவியை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அ
தோடு ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்ற பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்தவர் ப்ரீதி பாட்டிலாவார். இவருக்கு பிரிட்டன் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது இந்திய வம்சாவளியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.