சக்திவாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு பெண் ஒருவர் உள்பட 3 இந்திய அமெரிக்கர்களை அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார். அமெரிக்காவின் முக்கிய பதவிகளில் 24க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்களை அதிபர் டிரம்ப் இதுவரை நியமித்துள்ளார். இவர்களில் கேபினட் அந்தஸ்து பெற்ற முதல் இந்திய அமெரிக்கரான நிக்கி ஹாலே மற்றும் துணை பத்திரிகை செயலாளராக இருந்த முதல் இந்திய அமெரிக்கரான ராஜ் ஷா இருவரும் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில் அமெரிக்காவின் சக்திவாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு ஒரு பெண் உள்ளிட்ட 3 இந்திய அமெரிக்கர்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். ஆற்றல் துறையின் உதவி செயலாளர் பதவிக்கு ரீட்டா பேரன்வால், தனித்துவ மற்றும் சிவில் உரிமைகள் கண்காணிப்பு வாரியத்திற்கு ஆதித்ய பம்சாய் மற்றும் கஜானா உதவி செயலாளராக பிமல் படேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நியமனம் பற்றிய தகவல் செனட் சபைக்கு நேற்று அனுப்பப்பட்டுள்ளது.

Exit mobile version