எத்திசையும் புகழ் மணக்க எல்லோராலும் விரும்பப்படும் ஒரே மொழி தமிழ் மொழி என்று சொன்னால் அது மிகையாது. அப்படி புகழின் உச்சில் இருக்கும் தமிழ் மொழியின் ஆதிக்கம் நாடாளுமன்றத்தில் ஒங்கியிருக்கிறது.
இந்த நிதியாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 3 திருக்குறள்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. முதல் திருக்குறள் குடியரசுத் தலைவர் உரையிலும், மற்ற இரண்டு திருக்குறள்கள் பொருளாதார ஆய்வறிக்கையின் தொடக்கத்திலும் இடம்பெற்று இருந்தன. அதுமட்டுமின்றி, மத்திய பட்ஜெட் தாக்கலின் போதும் திருக்குறள் இடம்பெற்றது.
தனது, பட்ஜெட் உரையில் விவசாயம் சார்ந்த அறிவிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் கூறும் போது “பூமி திருத்தி உண்” என்ற ஒளவையாரின் ஆத்திச்சூவடியை மேற்கோள் காட்டினார். நிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண் என்பது தான் பொருள்.
அதுமட்டுமின்றி, “பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து” என்ற திருக்குறளையும் நிர்மலா சீதாராமன் மேற்கோள்ள காட்டினார். நோயில்லாதிருத்தல், செல்வம், விளைபொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் ஆகிய ஐந்தும் நாட்டிற்கு அழகு சேர்க்கும் என்பது தான் பொருள்.