நாள் ஒன்றுக்கு 3 GB : ஜியோவை சமாளிக்க ஏர்டெல்லின் புதிய திட்டம்

ஏர்டெல் நிறுவனம் ஜியோவை சமாளிக்க  நாள் ஒன்றுக்கு 3 ஜிபி வழங்கும் திட்டத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது.

சந்தைகளில் நாளுக்கு நாள் பெருகி வரும் வியாபார போட்டிகளால்  தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர தினம் ஒரு திட்டத்தை அறிவித்து வருகின்றன. ஜியோ இரு தினங்களுக்கு முன்பு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு “2020 நியூ இயர்” என்ற ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற நிறுவனங்கள் புது திட்டங்களை அறிவிக்க வேண்டிய நிலைமையில் உள்ளன.

இதில் ஏர்டெல் நிறுவனம் ஜியோவை சமாளிக்க மீண்டும் தனது பழைய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே அந்நிறுவனம் ரூ.398 விலை சலுகையில்  நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா சேவையை 28 நாட்களுக்கு அளித்து வந்தது. தற்போது ரூ.558 மதிப்பிலான சேவையை அறிவித்துள்ளது.

இதனுடன் மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு அன்லிமிடெட் நிமிடங்கள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். , வின்க் மியூசிக் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம் மெம்பர்ஷிப் சந்தா,  ஃபாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் போன்ற கூடுதல் இலவசங்களையும் அறிவித்துள்ளது. ஆனால் பழைய திட்டத்தில் 82 நாட்களாக இருந்த இதன் வேலிடிட்டி காலம் தற்போது 56 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களிடையே இத்திட்டம் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Exit mobile version