மத்திய அரசின் உதவியுடன் ஈரான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவர்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்து நன்றி தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் சகாய பீட்டர், கிறிஸ்து, மற்றும் சுதர்சன் ஆகியோர் மீன் பிடிக்க சென்றபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஈரானில் சிறைபிடிக்கப்பட்டனர். 50 நாட்கள் சிறையிலிருந்ததை அடுத்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரிந்துரையால் மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டது.
இதை தொடர்ந்து 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் அகஸ்தீஸ்வரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்த 3 மீனவர்களும் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.