குடமுழுக்கு விழாவையொட்டி நடைபெற்ற 2 ஆம் கால யாகசாலை பூஜைகள்

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி, இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

23 ஆண்டுகளுக்கு பிறகு  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா வரும் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜையுடன் எட்டு கால யாகசாலை பூஜை நேற்று தொடங்கியது. 22 ஆயிரம் சதுர அடியில் பெருவுடையார், பெரியநாயகி, பரிவார தெய்வங்களுக்கு தனித்தனியாக யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு, அதில் 22 வேதிகைகளும், 110 குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, 80 ஓதுவார்கள் திருமுறை, தேவாரம் ஓதி யாகசாலை பூஜையை தொடங்கினர். இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதில், நவதானியங்கள், பட்டு வஸ்திரங்கள், பழ வகைகள், 140 வகையான மூலிகைகளை கொண்டு யாக பூஜை, ஜபம், ஹோமம், பூர்ணாஹுதி பூஜைகள் நடைபெற்றன.

Exit mobile version