2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்

இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 இருபது ஓவர் தொடர், 3 டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இருபது ஓவர் தொடர் சமனில் முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 2 வது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களம் இறங்கி உள்ளது. தொடரை கைப்பற்ற இந்திய அணியும், வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் தென் ஆப்ரிக்க அணியும் விளையாடி வருகின்றன.

Exit mobile version