நியூசிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து நியூசிலாந்திற்கு 132 ரன்கள் வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்ற முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக விகாரி 55 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அபாரமாக பந்துவீசிய ஷமி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்று ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து நியூசிலாந்திற்கு 132 ரன்கள் வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.