செல்வ வளம் கொழிக்கும் உலகின் 2 வது சிறிய நாடு!!

அரசியல் காரணங்கள் மற்றும் நில அமைப்பு உள்ளிட்ட காரணங்களால், உலகின் மிகச் சிறிய நிலப்பரப்புகள் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு நாடுகளாக அங்கீகாரம் பெற்றுள்ள உலகின் 10 மிகச்சிறிய நிலப்பரப்புகள் குறித்து இன்றைய உல்லாச உலகம் தொகுப்பில் காணலாம்…

உலகின் மிகச்சிறிய நாடுகளின் பட்டியலில், வாடிகன் முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டின் மொத்த நிலபரப்பும் அரை சதுர கிலோ மீட்டருக்கு குறைவு தான். தலைநகர் சென்னை நகரின் பரப்பளவு 426 சதுர கிலோமீட்டர். அதாவது வாடிகனைப் போல சென்னை 852 மடங்கு பெரியது. இத்தாலியின் ரோம் நகருக்குள் இருக்கும் சிறிய பகுதிக்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டதற்கு, போப்புகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் நிகழ்ந்து வந்த மோதலே காரணம். இந்நகரில் காணப்படும் saint peter church உலகின் மிகப்பெரிய சர்ச்சாக உள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் பெரிதும் போற்றப்படும் புனித பீட்டரின் உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. முதல் கிறிஸ்தவ அரசரான கான்ஸ்டாண்டின் என்பவரால் கட்டப்பட்ட இந்த சர்ச்சானது, 15-ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த கலைஞர்கள் கட்டுமானப் பணியில் பங்கு பெற்றுள்ளனர். தேவாலயத்தின் மாடம், உலகமே போற்றும் மைக்கேல் ஏஞ்சலோ வடிவமைத்ததாகும். இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட பிரார்த்தனை மேடைகள் அமைந்துள்ளன. உள்ளறைகளில் காணப்படும் அலங்கார வேலைப்பாடுகள் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தும். ஒவ்வோராண்டிலும் கோடிக்கணக்கான மக்கள் உலகெங்கிலுமிருந்து இங்கு வந்து செல்கின்றனர்.

பிரான்ஸ் நாட்டின் நீட்சியாக அமைந்துள்ள மொனாகோ, உலகின் 2 வது மிகச்சிறிய நாடாக உள்ளது. 2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள மொனாகோவில் செல்வ வளம் கொழிக்கிறது. வருமானவரி இல்லாதது, குறைந்த தொழில்வரி உள்ளிட்ட காரணங்களால் மொனாகோவில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்கள், மொனாகோவில் முதலீடு செய்துள்ளனர். ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர்போன மொனோகாவில் தான் உலகப் புகழ்பெற்ற மொனாகா கிராண்ட் பிரிக்ஸ், FORMULA 1 கார்பந்தயங்கள் நடைபெறுகின்றன. அந்நாட்டு மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் மில்லியன்யர்களாக உள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மேலும் செல்வந்தர்களின் சூதாட்ட மையமாகவும் மொனாகோ திகழ்கிறது.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவுதான் நவ்ரு. 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள நவ்ரு தீவின் மண்ணில் பாஸ்பேட் தாதுப் பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. நவ்ரு தீவின்பெரும்பாலான மக்கள் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 97 சதவீத ஆண்களும் 93 சதவீத பெண்களும் உடல்பருமன் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் உலகில் அதிக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் நாடாக இத்தீவு உள்ளது. 

உலகின் 4வது சிறிய நாடாக பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள துவாலு தீவு திகழ்கிறது. ஹவாய் தீவுகளுக்கு ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த தீவுகள், 9சிறு தீவுகளை உள்ளடக்கியுள்ளது. 26 மைல் சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள துவாலு தீவுகளில், 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, சுமார் 11 ஆயிரத்து 192 பேர் வசிக்கின்றனர்.  பருவநிலை துவாலு தீவு அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. 1971 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இத்தீவின் பரப்பளவு அதிகரித்து வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். எனினும் இத்தீவின் மற்றொரு பகுதி மெதுவாக கடலில் மூழ்கி வருகிறது. அடுத்த 100 ஆண்டுகளில் துவாலு தீவு முற்றிலுமாக கடலில் மூழ்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  சிறந்த காலநிலை, சிறப்பான சுற்றுலா தலங்கள், பாதுகாப்பு வசதிகள், விமான சேவைகளால் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.

ஐரோப்பிய அளவில் 3வது சிறிய நாடாகவும் உலக அளவில் 5வது சிறிய நாடாகவும்  சான் மெரினோ உள்ளது. உலகில் உள்ள பழமையான குடியரசு நாடுகளில் ஒன்றான இதில் புராதான கட்டிடங்கள் நிறைந்து காணப்படுகின்றன. 61 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள சான் மெரினோவின் மக்கள் தொகை 30 ஆயிரம் தான். ஐரோப்பிய நாடுகளிலேயே சற்று வித்தியாசமான அரசியலமைப்புச் சட்டத்தை சான் மெரினோ கொண்டுள்ளது. இந்நாட்டில் CAPTAN REGENT எனப்படுபவர்களே உச்சபட்ச அதிகாரம் பெற்றவர்களாக திகழ்கிறது. 6 மாதத்திற்கு ஒருமுறை CAPTAN REGENT தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். APENNINE மலைத் தொடரில் அமைந்துள்ள இந்த நாட்டில் சமதளப்பரப்புகளே இல்லாமல் முழுவதும் குன்றுகளாகவே காணப்படுகின்றன.  உலகிலேயே மக்கள் தொகையை விட கார்களின் எண்ணிக்கை சான் மெரினோ அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Exit mobile version