தமிழ்நாடு முழுவதும் 2ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது.

நேற்று தொடங்கிய இந்த சிறப்பு முகாமில், தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்கள் தங்களது பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொண்டனர். பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற பணிகளும் இந்த முகாம்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் வாக்காளர் சரிபார்ப்பு பணி நடைபெற இருக்கிறது. திருத்தங்களை மேற்கொள்ள இது கடைசி வாய்ப்பு என்பதால், பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version