இந்தியா,ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2 வது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோஹ்லி சதம் அடித்து அசத்தினார். அவருக்கு இது 40வது சதம் ஆகும். இதையடுத்து, இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு 251 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
251 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் கடைசி ஓவரை சிறப்பாக வீசிய தமிழகத்தை சேர்ந்த விஜய் ஷங்கர் 2 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவை வெற்றி பெற செய்தார்.
இந்திய அணியின் இந்த வெற்றி 500வது சர்வதேச வெற்றியாகும். 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.