ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்,34 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள்போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதனையடுத்து ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அலெக்ஸ் கேரே 18 ரன்களும்,கேப்டன் ஃபின்ச் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய கவாஜா 21 ரன்களில் ரன் அவுட் ஆனார். 22 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்துள்ளது .அந்த அணியின் மார்ஷ் 43 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 12 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.