"பூமிக்கு 2 புதிய நிலவுகள் ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு"

பூமிக்கு எதனை நிலவுகள் என்று கேட்டால் சட்டென்று சொல்லுவோம் ஒன்றே ஒன்று, அதன் பெயர் நிலவு என்று. வானத்தை பார்த்தால் நம் கண்களுக்கு தெரிவது வெறும் நிலவு  மட்டும் தான். ஆனால் தற்போது நிலவை தவிர, கூடுதலாக 2 நிலவுகள் இருக்கிறது என்கின்றனர் ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள்.

2 நிலவுகள்  பூமிக்கு மேல இருந்தும் ஏன் அவை நம் கண்களுக்கு தெரிவது இல்லை என்று நீங்கள் கேட்கலாம்?. காரணம் அந்த இரு நிலவுகளும் தூசுக்களால் ஆன மேகங்களை போல் காணப்படுவதாகவும், பூமியில் இருந்து நிலவு உள்ள தொலைவிலேயே இந்த இரு நிலவுகளும் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மங்கலான ஒளியை இவை உமிழ்வதால் கண்டறிவதில் சிக்கல் இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வானத்தில் நிலவு இருக்கும் அதே தூரத்தில் தான் இந்த கூடுதல் 2 நிலவுகளும் இருக்கின்றன. அவை முற்றிலும் தூசுக்களால் ஆனா மேகங்கள் என்பதால் அவை வெறும் கண்களால் காண்பது அரிது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

1961 ஆம் ஆண்டு முதலில் இது போன்ற மேகங்களால் ஆன நிலவை வானியல் வல்லுநர் கோர்டயலெவ்ஸ்கி கண்டுபிடித்தார். தற்போது கண்டுபிடித்திருக்கும் 2 நிலவுகளுக்கு வானியல் வல்லுநர் கோர்டயலெவ்ஸ்கியின் பெயரையே சூட்டியுள்ளனர். 

Exit mobile version