2ஜி வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் தினமும் விசாரணை

2ஜி ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் தினமும் விசாரணை நடைபெறவுள்ளது.

2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்தியமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி கனிமொழி ஆகியோரை கடந்த 2017ம் ஆண்டு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேலும், வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், 2ஜி ஊழல் வழக்கு தொடர்பாக இன்று முதல் தினமும் விசாரணை நடைபெறும் என அறிவித்தது. அதன்படி வழக்கின் விசாரணை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

Exit mobile version