புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், 29 வது நாளாக தொடரும் நிலையில், 6 மாநில விவசாயிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 29ஆவது நாளை எட்டியுள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு, மத்திய அரசு 3ஆவது கடிதம் அனுப்பிய நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க தயார் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், 6 மாநில விவசாயிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார். விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய பிறகு புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் உறுதியான நிலைப்பாடு தெரியவரும் எனக் கூறப்படுகிறது.