துருக்கி நாட்டில் பனிச்சரிவில் சிக்கி 28 பேர் உயிரிழப்பு

துருக்கி நாட்டில் ஏற்பட்ட பனிச்சரிவின் காரணமாக மீட்புக்குழுவைச் சேர்ந்த 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

துருக்கி நாட்டில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வேன் மாகாணத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இருவர் மாயமாகியுள்ளனர். இது குறித்து அநாட்டு பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களை மீட்க பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்தனர். அப்போது மீண்டும் பெரிய அளவிலான பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், மீட்புக் குழுவினரின் வாகனம் பனிச்சரிவில் சிக்கியது. இந்த இயற்கை பேரிடரில் 8 ராணுவ வீரர்கள், 3 அரசு பாதுகாவலர்கள், 3 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 9 தன்னார்வலர்கள் என 23 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து பனிச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு விரைந்த 300க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

Exit mobile version