குஜராத் மாநிலம் வதோதராவில் 18 நாடுகளை சேர்ந்த 28 கலைஞர்கள் சுவரோவியங்களால் அழகுப்படுத்தி வருகின்றனர்.
குஜராத்தின் வதோதராவை அழகுப்படுத்தும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் 18 நாடுகளை சேர்ந்த 28 கலைஞர்கள் வதோதரா நகரம் முழுவதும் சுவரோவியங்களை வடிவமைத்து வருகின்றனர்.
தங்களது நாடுகளின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் ஓவியங்களை இந்த கலைஞர்கள் வதோதராவின் சுவர்களில் வடிவமைத்து வருகின்றனர். மற்ற நாட்டு கலைஞர்களுடன் இணைந்து பணிபுரிவதன்மூலம் மற்ற நாட்டினரின் கலாச்சாரங்களை அறிந்துகொள்ள முடிவதாக கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாதகாலமாக இந்த ஓவியங்களை இந்த கலைஞர்கள் வடிவமைத்து வருகின்றனர்.
இந்தியாவில் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது வித்தியாசமான அனுபவத்தை தருவதாக அவர்கள் தெரிவித்தனர்.