ஒரேசமயத்தில் 262 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணத்தில் வசூலான மொய் பணத்தை புல்வாமா தற்கொலை படை தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு அளித்த நெகிழ்ச்சியான சம்பவம் சூரத் நகரில் நிகழ்ந்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஸ்ரீ சவுராஸ்டிரா படேல் சமாஜ் அமைப்பின் சார்பில் 262 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. திறந்தவெளி திடலில் நடைபெற்ற இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் புல்வாமா தாக்குதலில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். இதனையடுத்து திருமணத்தில் வசூலான 50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்களை தேசத்திற்காக வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கபோவதாக மணமக்கள் தெரிவித்தனர்.