தமிழகத்தில் 256 சார்ஜிங் மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி

பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டிற்கென தமிழகத்தில் உள்ள 256 இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் மூலம் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக, பேட்டரி வாகனங்களை பயன்படுத்தும்படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் பேட்டரி வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அவற்றுக்கு சார்ஜிங் மையங்கள் அமைத்து வருவதோடு மானியமும் மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டிற்காக இரண்டாயிரத்து 636 சார்ஜிங் மையங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 256 சார்ஜிங் மையங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 141-ம், கோவையில் 25-ம், மதுரையில் 50-ம் என சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், வேலூர், சேலம், ஈரோடு மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் தலா 10 சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
 

Exit mobile version