தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீரின் அளவு 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு 12 கன அடியாக இருந்த நீர்வரத்து, 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 9,000 கன அடியாக உள்ளது. பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்க 63வது நாளாகவும், பரிசல் இயக்க 6வது நாளாகவும் விதிக்கபட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.