கோவையில் தமிழக அரசின் குடிமராமத்து பணிகளால் நிரம்பிய 25 குளங்கள்

 கோவையில் தமிழக அரசின் குடிமராமத்து பணிகளால் தூர்வாரப்பட்ட தடுப்பணைகளால் 25 குளங்கள் நிரம்பியுள்ளன.

தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான ஏரிகள்,குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்டத்திலுள்ள சித்தரை சாவடி, மதுக்கரை குளம், புதுக்காடு அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள் தூர்வராப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போது பெய்துள்ள மழையால், கோவையில் உள்ள அனைத்து குளங்களிலும், சிற்றாறுகளும் நிரம்புள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை நீர்வளத்துறை கோவை கோட்டம் செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ் தெரிவிக்கையில், நொய்யல் ஆற்றில் வெள்ளம் புரண்டு ஓடுவதால், 25 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version