25 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு – வியப்பில் ஆய்வாளர்கள்

சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வில், 25 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது, ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கீழடியைத் தொடர்ந்து அகரம் பகுதியிலும் தொல்லியல் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம், 25 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்படுவது, இது 2வது முறையாகும். இதற்கு முன்பாக திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூரில் 28க்கும் மேற்பட்ட அடுக்குகளை கொண்ட உறைகிணறும், கீழடியில் 18 அடுக்குகள் கொண்ட உறை கிணறும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், அகரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள உறைகிணறு, 80 சென்டி மீட்டர் விட்டமும், 380 சென்டி மீட்டர் உயரமும் கொண்டதாக உள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version