சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 1,132 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் ஆயிரத்து 132 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, அதிகளவிலான மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், மானாமதுரை இடைத்தேர்தலுக்காக தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். தேர்தல் முறைகேடு குறித்து 1950 என்ற டோல் பிரி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version