ஜூவ சமாதி அடைய போவதாக முதியவரின் சுவரொட்டியால் பரபரப்பு

சிவகங்கை மாவட்டத்தில் முதியவர் ஒருவர் ஜூவ சமாதி அடைய போவதாக நகரின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவ பக்தரான இருளப்பசாமி என்பவர் குடும்பத்துடன் பாசாங்கரை கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இருளப்பசாமி தான் ஜீவ சமாதி அடைய விருப்பதாக சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார். அதன்படி இருளப்பசாமி இன்று இரவு 12 மணியில் இருந்து நாளை அதிகாலை 5 மணிக்குள் ஜூவ சமாதி அடைய இருப்பதாக அறிவித்துள்ளார். முதியவர் ஜீவசமாதி அடைவதை காண வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை பக்தர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஜீவ சமாதி தொடர்பான தகவல்கள் பரவியதையடுத்து, மற்ற ஊர்களில் இருந்தும் பக்தர்களும், பொதுமக்களும் பாசாங்கரைக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.

Exit mobile version