ஒசூரில் மழை நீரை சேகரிக்கும் பொருட்டு 25 ஏரிகளை தூர்வாரும் பணியை, மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ், மழைநீரை சேகரிக்கும் நோக்கில் 25 ஏரிகள் தூர்வாரப்பட உள்ளது. முக்கிய நீர் ஆதாரங்களை காக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், மத்திய அரசின் திட்டமான ஜல் சக்தி அபியான் திட்டத்தில், மரங்கள் நடவும், ஏரிகளை காக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி மாவட்டத்தில் ஏரிகளை தூர்வார மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில், ஏரிகளை தூர்வாரும் பணியை தொடங்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. இது தொடர்பாக நடந்த பூஜையில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.