வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய வட மாநிலங்கள் மற்றும் அசாம், அருணாசல பிரதேசம், மிசோரம், சிக்கிம் ஆகிய வட கிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் மழை காரணமாக 15 பேரும் வட கிழக்கு மாநிலங்களில் 10 பேரும் பலியாகியுள்ளனர். கனமழை காரணமாக கங்கையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதேபோல், பீகாரின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில சாலை வசதி தடை பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோவா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.