மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 24 ,000 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 24 ,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து அதிகப்படியான நீர் திறக்கப்படுவதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதாலும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 24 ,021 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.61 அடியாகவும், நீர் இருப்பு 92.851 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 14 ,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

Exit mobile version