24 மணி நேரத்திற்கு மழை தொடரும் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஏராளமான அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நாசிக் போன்ற இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தலைநகர் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ரயில் சேவை முடங்கியள்ளது. சாலைகளில் தேங்கி கிடக்கும் மழைநீரால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பா இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மாடிகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

Exit mobile version