சென்னையில் உருவாக்கப்பட்ட அதிநவீன சொகுசு ரயில் பெட்டிகள் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டன.
சென்னை வில்லிவாக்கம் அருகே இயங்கி வரும் ஐசிஎப் ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட தேஜஸ் ரயிலுக்கான 23 பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. தகடுகளால் ஆன அழகிய உட்புறம், சொகுசு இருக்கைகள் ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் பாடல்கள், வீடியோக்கள் மற்றும் தகவல்கள் அறியும் வகையில் டிஜிட்டல் திரைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ரெயில்பெட்டிகளை தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஐசிஎப்பில் நடைபெற்றது. இதனை மூத்த ஊழியர் ஒருவர் கொடியசைத்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.