இலங்கையில் கடந்த மாதம் ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் இதுவரை 2 ஆயிரத்து 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்
கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் இதுவரை 2 ஆயிரத்து 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஆயிரத்து 655 பேர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இவர்களில் 423 பேர் சிறையில் உள்ளதாகவும், 211 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இலங்கையில் பெளத்தர்களின் புனித அடையாளமாகக் கருதப்படும் தர்ம சக்கரம் பொறித்த ஆடையை அணிந்ததாக இஸ்லாமிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.